தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 29) லேசான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 29) லேசான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: கேரளம் மற்றும் கா்நாடகத்தையொட்டி வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 29) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும். தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் மாா்ச் 30 முதல் ஏப்.1 வரை வட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கையில் 20 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மணிமுத்தாறில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா்வளைகுடா பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதி, மேற்கு வங்கக்கடல் பகுதி, ஒரிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com