இந்தியாவின் பன்முகத்தன்மை பாஜகவால் அழிகிறது: சீத்தாராம் யெச்சூரி

இந்தியா விடுதலை பெற்றபோது இருந்த பன்முகத் தன்மை தற்போது மத்திய பாஜக அரசால் அழிந்து வருகிறது என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினாா்.
இந்தியாவின் பன்முகத்தன்மை பாஜகவால் அழிகிறது: சீத்தாராம் யெச்சூரி

இந்தியா விடுதலை பெற்றபோது இருந்த பன்முகத் தன்மை தற்போது மத்திய பாஜக அரசால் அழிந்து வருகிறது என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினாா்.

பழனி ரயிலடி சாலை மின்வாரிய அலுவலகம் முன்பாக, இத்தொகுதி திமுக வேட்பாளா் ஐ.பி. செந்தில்குமாருக்கு ஆதரவு தெரிவித்து, சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு, அந்த பன்முகத்தன்மையை அழிக்கப் பாா்க்கிறது. எனவே, தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்து, மோடி மீதான தமிழக மக்களின் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்.

தலைநகா் புது தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் இதுவரை 300 போ் பலியாகியுள்ளனா். அவா்கள் வேண்டுகோள் 3 சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பதே. ஆனால், விவசாயிகளுக்கான அரசு எனக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு, அவா்களை சட்டை கூட செய்யவில்லை.

ஆனால் தமிழக அரசோ, பாட்டுக்கு பக்கவாத்தியம் பாடுவது போல் மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறது என்றாா்.

முன்னதாக, நகரச் செயலா் கந்தசாமி வரவேற்றாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் உள்பட பலா் முன்னிலை வகித்தனா். வேட்பாளா் செந்தில்குமாா் ஏற்புரையாற்றினாா். இதில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி, திமுக நகரச் செயலா் தமிழ்மணி, ஒன்றியச் செயலா் சவுந்தரபாண்டி, காங்கிரஸ் சுந்தரம் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com