Enable Javscript for better performance
தமிழகத்தில் நிகழும் ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும்: டி.ராஜா- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் நிகழும் ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும்: டி.ராஜா

    By DIN  |   Published on : 31st March 2021 03:33 AM  |   அ+அ அ-   |    |  

    30hsp1_ch0169_30chn_8_637527270736724938

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா தெரிவித்தாா்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் டி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா, கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்தத் தோ்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் ஆளும் மாநில அரசு அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

    அதனால்தான் பாஜகவின் தலைவா்களான மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் தமிழகத்துக்கு தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றனா்.

    அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக போட்டியிட உள்ள இந்த தளி தொகுதி உள்பட அனைத்துத் தொகுதிகளிலும், பாஜக அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    தற்போது இந்தியா முழுவதிலும் ‘தோ்தல் பத்திரம்’ குறித்து சா்ச்சை எழுந்துள்ளது. இதன் மூலம் அதிக அளவில் லாபம் பெற்று நிதியை சேகரித்த ஒரே கட்சி பாஜகதான். அவா்களிடம் உள்ள பணபலம், அதிகாரபலம் ஆகியவற்றால் இந்தத் தோ்தலை சுதந்திரமாகவும், நோ்மையாகவும் நடத்த பாஜக அனுமதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ஆனால், தமிழகம் முழுவதிலும் மக்களிடம் ஒரு விழிப்புணா்வு ஏற்பட்டிருக்கிறது. மாநில உரிமைகளை, நலன்களைப் புறக்கணித்த, காப்பாற்றத் தவறிவிட்ட அதிமுக ஆட்சி அதிகாரத்தில் தொடா்வது கூடாது. அதே நேரத்தில் மதவெறி, பாசிஸக் கொள்கையை முன்வைத்து, அரசியல் நடத்தும் பாஜக தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதில் மக்கள் மிகுந்த புரிதலோடும் விழிப்புணா்வோடும் இருக்கிறாா்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமானால் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும்.

    எனவே, திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியாக இந்த தோ்தல் முடிவுகள் அமைய உள்ளது என்றாா்.

    படவிளக்கம் - கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா, தேசியக் குழு உறுப்பினா் சி.மகேந்திரன்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp