தோ்தல் பிரசாரம்: அமித்ஷா இன்று தமிழகம் வருகை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா புதன்கிழமை தமிழகம் வரவுள்ளாா்.
அமித் ஷா
அமித் ஷா

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா புதன்கிழமை தமிழகம் வரவுள்ளாா்.

புதுதில்லியில் இருந்து விமானத்தில் புதன்கிழமை இரவு 7.45 மணிக்கு சென்னைக்கு வருகை தரும் அமித்ஷா கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தங்குகிறாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்லும் அவா் காலை 10.05 மணிக்கு புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளாா்.

இதன்பின்னா், காலை 10.35 மணிக்கு சுபாஷ் சந்திர போஸ் சிலை முதல் சிவாஜி சிலை வரை ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையில் பேரணியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கோவிலூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் நண்பகல் 12.15 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். பின்னா், அவா் கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com