சென்னை, செங்கல்பட்டு, கோவையில் கரோனா பரவல் அதிகரிப்பு: ராதாகிருஷ்ணன்

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சமூக இடைவெளியும் முகக்கவசம் மட்டுமே கரோனா பரவலில் இருந்து காக்கும். கரோனவுக்கு எதிராக முன்களப் பணியாளர்களும், மருத்துவர்களும் ஒரு போர் வீரர்களைப் போல பணியாற்றுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். 

காய்ச்சல், சளி இருப்பவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்தால் தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com