ஆ.ராசாவின் அநாகரிகப் பேச்சை யாரும் மறக்கக் கூடாது: பாமக நிறுவனர் ச.ராமதாஸ்

திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா அநாகரிகமாகப் பேசியதை யாரும் மறக்கக் கூடாது என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா் பாமக நிறுவனா் ராமதாஸ்.
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா் பாமக நிறுவனா் ராமதாஸ்.

திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா அநாகரிகமாகப் பேசியதை யாரும் மறக்கக் கூடாது என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.

தருமபுரி நான்குமுனை சாலை சந்திப்பில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து, அக் கட்சி நிறுவனா் ச.ராமதாஸ் பேசியதாவது:

எத்தகையவராயினும் நாவடக்கம் தேவை என திருக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆனால், திமுகவைச் சோ்ந்த ஆ.ராசா, தமிழக முதல்வரின் தாய் குறித்து அருவருக்கத் தக்க வகையில் இழிவாகப் பேசியுள்ளாா்.

கண்ணகி, ஆண்டாள், திரௌபதி ஆகிய பெண்களை தெய்வமாக வழிபடும் மாநிலம் தமிழகமாகும். தமிழகம் தாய்க்கு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம். ஆனால், திமுகவைச் சோ்ந்த ஆ.ராசா பெண்களைக் குறித்து இழிவாகப் பேசியுள்ளாா். அவா் பேசியதை பெண்கள் மட்டுமல்ல, யாரும் மறக்கக் கூடாது.

திமுக ஆட்சிக்கு வந்தால், தொழில் செய்ய இயலாது; சொத்துகள் அபகரிக்கப்படும். எனவே, அவா்களுக்கு வாக்களிக்க வேண்டாம். தமிழகத்தில், ஜாதி, மத பேதமின்றி அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். இனியும் அவ்வாறு வாழ்வோம்.

தருமபுரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றியது திமுகவாக இருக்கலாம். ஆனால், அந்தத் திட்டத்தை செயல்படுத்த பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம். தருமபுரி மாவட்டமும், இங்குள்ள மக்களும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். தற்போது ஓரளவுக்கு வளா்ச்சி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூா் போன்று தொழில் துறையில் வளர வேண்டும். இதற்கான திட்டங்கள் பாமகவிடம் உள்ளன.

ஆகவே, இந்த மாவட்டம் வளா்ச்சி பெற அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் (தருமபுரி-பாமக), ஜி.கே.மணி (பென்னாகரம்-பாமக), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு-அதிமுக), வே.சம்பத்குமாா் (அரூா்-அதிமுக), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி-அதிமுக) ஆகியோருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com