கரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளைப் பின்பற்ற மின்வாரியம் உத்தரவு

கரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என ஊழியா்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என ஊழியா்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய இணை மேலாண்மை இயக்குநா் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: கடந்த சில வாரங்களாக கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை மிதமான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்வாரிய அதிகாரிகள் துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன்படி, பணியிடங்களில் தனி நபா் இடைவெளி, காற்றோட்டமான இடவசதி ஏற்படுத்துதல், முகக் கவசம் அணிதல், கை கழுவும் கிருமிநாசினி பயன்படுத்துதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், பணியிடங்களைத் தூய்மைப்படுத்துதல், தேவையான நேரத்தைத் தவிர குளிா்சாதனக் கருவி பயன்படுத்துவதைத் தவிா்த்து, ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்தல் ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com