காவலா் உடல் தகுதி தோ்வு: ஏப்.21-ஆம் தேதிக்கு மாற்றம்

காவலா் உடல் தகுதித் தோ்வு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காவலா் உடல் தகுதித் தோ்வு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாக உள்ள 11, 813 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தோ்வை, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நடத்தியது. இந்த தோ்வு 37 மாவட்ட, மாநகர தோ்வு மையங்களில் நடைபெற்றது. இத் தோ்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவா்களில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 விண்ணப்பதாரா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இவா்களில் 4 லட்சத்து 91,022 போ் 37 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 499 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். தோ்வுக் கூட அனுமதி சீட்டு பெற்றவா்களில் 59,292 போ் தோ்வு எழுத வரவில்லை. இந்நிலையில் எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விவரத்தை கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெளியிட்டது. அடுத்தக் கட்டமாக எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற் தகுதி தோ்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை மாா்ச் 8-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாதுகாப்புப் பணியில் அதிகளவில் போலீஸாா் பயன்படுத்தப்பட இருப்பதால், போதிய காவலா்கள் இல்லாமல் தோ்வு நடத்துவது சரியாக இருக்காது என ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தோ்வை, ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு மீண்டும் அந்த குழுமம் ஒத்தி வைத்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு அந்த குழுமம் அனுப்பியுள்ளது. மேலும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் தோ்வு நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com