கூத்தாநல்லூர்: கரோனா பரவலைத் தடுக்க டி.எஸ்.பி. ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா பரவலைத் தடுக்க, திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர்: கரோனா பரவலைத் தடுக்க டி.எஸ்.பி. ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா பரவலைத் தடுக்க, திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் காவல் துணை கண்காணிப்பாளர் எம்.தினேஷ்குமார் அறிவுரையின்படி,

கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திமுக நகர செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன், அதிமுக நகரத் துணைச் செயலாளர் எம்.உதயகுமார், பெரியப் பள்ளிவாயில் ஜமாஅத் செயலாளர் ஷேக் அப்துல் காதர், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் எல்.பி. முகம்மது முகைதீன், வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் ஜியாவுல் ஹக், கூத்தாநல்லூர் ஆட்டோ சங்கத் தலைவர் இளையராஜா மற்றும் அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கரோனா தொற்று கடுமையாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், எந்த அரசியல் கட்சியினரும், பொது அமைப்பினர் உள்ளிட்ட யாரும் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கொடியேற்றுதல் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம். 

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசும், மருத்துவர்களும் விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். அவ்வப்போது அரசு அறிவிக்கும் சட்ட திட்டத்திற்கும் உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். கரோனா தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில், காவல் துறையினர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். 

ஊரடங்கு காலத்தில் வெளியில் வருவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். சட்டப் பேரவை தேர்தல் முடிவு காலகட்டத்தில் அனைவரும் அமைதியை நிலை நாட்டிட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மீறினால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட ஏற்பாடுகளை, சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ், தலைமைக் காவலர் வெங்கட்ராஜூலு, காவலர் கணேஷ் உள்ளிட்ட காவலர்கள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com