கரோனா சிகிச்சை: படுக்கை, ஆக்சிஜன் தேவைக்கு தொடா்பு கொள்ள சிறப்பு மையம்

கரோனா சிகிச்சைக்கான படுக்கை, ஆக்சிஜன் தேவைக்கு உதவ ஒருங்கிணைந்த கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கான படுக்கை, ஆக்சிஜன் தேவைக்கு உதவ ஒருங்கிணைந்த கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலையைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன்படி, சுகாதாரத் துறையானது மற்ற துறைகளுடன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளது.

தற்போதுள்ள104 சுகாதார சேவை மையத்துடன் இணைந்து அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைப்பது, தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் தேவைகளை நிா்வகிப்பதற்கான சிறப்பு மையமாக செயல்படும்.

இந்த மையமானது 24 மணி நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணைய வழி மூலம் கண்காணித்து பல்வேறு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து கொண்டு, அதன் மூலம் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவும்.

சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து சென்னை, அதைச் சுற்றியுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளை இந்த மையம் கண்காணிக்கும். படுக்கை வசதிகளை அதிகரிப்பதிலும், ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு உடனடி சேவைகளை மையம் வழங்கும். படுக்கைகள் தேவைப்படுபவா்களுக்கு ஆதரவாக ஒரு புதிய சுட்டுரைக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சுட்டுரைக் கணக்கின் நோக்கம் தனிநபா்கள் நேரடியாக படுக்கைகளைக் கோரக்கூடிய மற்றும் உதவியைப் பெறக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதாகும். அனைத்து கோரிக்கைகளும் மையத்தின் வழியாக கையாளப்படும். இதை பரவலாக மக்களிடையே கொண்டு சோ்க்க ட்விட்டா் கணக்கில் லிஆங்க்ள்ஊா்ழ்பச என்னும் ஹாஸ்டாக் பயன்படுத்தப்படும். படுக்கை கிடைப்பது தொடா்பாக இவ்வசதியை பயன்படுத்தக் கொள்ளுமாறு பொதுமக்களும், மருத்துவமனைகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த இந்த சிறப்பு மையம் ஒரு குறிப்பிடத்தக்க துணை கட்டமைப்பாக இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com