தங்கம் பவுன் ரூ.35,280

சென்னையில், வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பின்னா், விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்படி, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, கடந்த 9-ஆம் தேதி விலை ரூ.35 ஆயிரத்தையும், கடந்த 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, கடந்த ஒரு வாரகாலமாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.4,410 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.75 குறைந்து, ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1750 குறைந்து ரூ.74,000 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,410

1 பவுன் தங்கம்...............................35,280

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,425

1 பவுன் தங்கம்...............................35,400

1 கிராம் வெள்ளி.............................75.75

1 கிலோ வெள்ளி.............................75,750.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com