தங்கம் பவுன் ரூ.35,280

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, அதே விலையில் (பவுன் ரூ.35,280) நீடித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, அதே விலையில் (பவுன் ரூ.35,280) நீடித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, கடந்த 9-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், கடந்த 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் (பவுன் ரூ.35,280) நீடித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,410 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.72.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.72,800 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,410

1 பவுன் தங்கம்...............................35,280

1 கிராம் வெள்ளி.............................72.80

1 கிலோ வெள்ளி.............................72,800

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,410

1 பவுன் தங்கம்...............................35,280

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com