திருவள்ளூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக எம்.எல்.ஏ. கூடுதல் வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.
திருவள்ளூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி
திருவள்ளூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி

திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக எம்.எல்.ஏ. கூடுதல் வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.

திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். 

இதில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணாவும் போட்டியிட்டனர். 

இதில் திமுக வேட்பாளருக்கு தபால் வாக்குகள்-1393 சேர்த்து 106,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தபால் வாக்குகள் சேர்த்து 83,797 வாக்குகள் பெற்று, 22922 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 

இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பசுபதி - 14928, பகுஜன் சமாஜ் கட்சி டி.தாஸ்- 2316, அமமுக வேட்பாளர் குரு - 1070 வாக்குகளும் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com