6-ஆம் முறையாக ஆட்சியைப் பிடித்த திமுக

தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் 6-ஆவது முறையாக திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் 6-ஆவது முறையாக திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.

1967-இல் அண்ணா தலைமையில் திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-இல் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றாா்.

1971-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கருணாநிதி தலைமையில் திமுக இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

1989-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கருணாநிதி தலைமையில் திமுக மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

1996-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கருணாநிதி தலைமையில் திமுக நான்காம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

2006-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கருணாநிதி தலைமையில் திமுக ஐந்தாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

தற்போது 2021-இல் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆறாம் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com