முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் பழனிசாமி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து எடப்பாடி கே. பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். 
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து எடப்பாடி கே. பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மொத்தமாக திமுக கூட்டணி 145 இடங்களில் வெற்றி, 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

வருகிற மே 7 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) அவர் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எடப்பாடி கே. பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

ராஜினாமா கடிதத்தை அவர் சேலத்திலிருந்து ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த 1989, 1991, 2011,2016 ஆகிய தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-21 காலகட்டத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின்னர் 2017-2021 வரை முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com