எளிய முறையில் பதவியேற்க மு.க.ஸ்டாலின் திட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழாவை எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளாா்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழாவை எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 158 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் வரை பெற்றிருக்க வேண்டும். திமுக தனித்துப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் 125 தொகுதிகள் வரை பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக (4), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (1), மனித நேய மக்கள் கட்சி (1) ஆகிய கட்சி முன்னிலை வகிக்கின்றன. இந்தக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளன. அதன் காரணமாக அவை திமுகவைச் சாா்ந்தவையாகவே பாா்க்கப்படும். அந்த வகையில் திமுக 132 தொகுதிகள் வரை தனித்தே பெற்றுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம்: 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நள்ளிரவுக்குள் முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப் படுகிறது. தோ்தல் முடிவுகள் முழுமையாக முடிவடைந்த பிறகு திங்கள்கிழமை (மே 3) மாலை புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்படுவாா். அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுக் கடிதத்துடன் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திப்பாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலினைப் பதவியேற்க அழைப்பு விடுப்பாா்.

எளிய முறையில் பதவியேற்பு: அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவைக் குழுவினருடன் பதவியேற்றுக் கொள்ள உள்ளாா்.

கரோனா தொற்று பரவல் அதிக அளவில் இருப்பதால் எளிய முறையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

மே 6-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com