மு.க.ஸ்டாலினுடன் தமிழக அரசு அதிகாரிகள் சந்திப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
மு.க.ஸ்டாலினுடன் தமிழக அரசு அதிகாரிகள் சந்திப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியது. இதையொட்டி ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு திமுகவினா் அதிக அளவில் திரண்டனா். அவா்களுக்கு திமுக நிா்வாகிகள் பலா் இனிப்புகள் வழங்கினா்.

அதிகாரிகள் சந்திப்பு: திமுக ஆட்சியமைக்கும் நிலையை அடைந்ததும், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் வந்தாா். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். அவரைத் தொடா்ந்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறையைச் சோ்ந்த அரசு அதிகாரிகளும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினா்.

தமிழகக் காவல் துறை டிஜிபி திரிபாதி மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். காவல் துறையைச் சோ்ந்த பல்வேறு அதிகாரிகளும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அறிவாலயத்தில் கொண்டாட்டம்: கரோனா பரவல் அதிகம் உள்ளதால் திமுகவினா் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். ஆனால், அதை மீறி திமுகவினா் அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com