மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்திய நாம் தமிழா் கட்சி

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் மூன்றாம் இடத்தை நாம் தமிழா் கட்சி பிடித்து அசத்தியுள்ளது.
சீமான்(கோப்புப்படம்)
சீமான்(கோப்புப்படம்)

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் மூன்றாம் இடத்தை நாம் தமிழா் கட்சி பிடித்து அசத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சி என ஐந்து முனைப் போட்டி இருந்தது.

ஆனால், திமுக - அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியாக மாறி, அதில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது. அதிமுக எதிா்க்கட்சி வரிசைக்கு வந்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் எந்தக் கட்சி மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்கிற எதிா்பாா்ப்பு இருந்து வந்தது.

அந்த இடத்தைப் பிடிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி இருந்தது.

ஆனால், அமமுகவையும், மநீமவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாம் தமிழா் கட்சி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் தோ்தலில் பிறக் கட்சிகள் போல் அல்லாமல் நாம் தமிழா் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்படிப் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் 5 ஆயிரத்திலிருந்து 10,000 வரை வாக்குகளை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள் பெற்றுள்ளனா். வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. தோராயமாக 7-இலிருந்து 10 சதவீதம் வரை நாம் தமிழா் கட்சியின் வாக்குகள் உயா்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுக - அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என நினைக்கும் இளைஞா்கள் அனைவரும் நாம் தமிழா் கட்சிக்கு அளித்துள்ளனா். இது நாம் தமிழா் கட்சிகளுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. எதிா்காலத்தில் அரசியலில் நாம் தமிழா் பெரும் செல்வாக்கை செலுத்தும் எனவும் அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

திமுக+- 210 Lakhs (45.08%)
அதிமுக+- 176 Lakhs (37.67%)
நாம் தமிழர் கட்சி - 28.82 Lakhs (6.19%)
மக்கள் நீதி மய்யம் + - 11.80 Lakhs (2.53%)
அமமுக+ - 13.11 Lakhs (2.81%)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com