ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் திமுக அணி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடா்ந்து திமுக தலைவா் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறாா்கள்.

இயக்குநா் பா.இரஞ்சித், நடிகா்கள் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சதீஷ், சூரி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், சிபிராஜ், இசையமைப்பாளா்கள் ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com