அக்னி நட்சத்திரக் காலம் இன்று தொடங்குகிறது

கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை (மே 4) தொடங்கி, 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.
அக்னி நட்சத்திரக் காலம் இன்று தொடங்குகிறது

சென்னை: கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை (மே 4) தொடங்கி, 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.

இருப்பினும், அடுத்த 5 நாள்கள் வரை தற்போது இருக்கும் வெப்பநிலையே தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் என்னும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணா்கிறோம். இந்தக் காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம். ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கும்.

நிகழாண்டில் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 25 நாள்கள் நீடிக்கவுள்ளது. ஆனாலும், அடுத்த 5 நாள்கள் வரை தற்போது இருக்கும் வெப்பநிலையே தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தமிழகத்தை பொருத்தவரை, வெப்பத்தின் தாக்கம் தற்போது சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் இருந்து காற்று வீசுவது முக்கிய காரணம் ஆகும். இதேநிலைதான் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீடிக்கும். இதன்பிறகு, கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com