மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி வாழத்துத் தெரிவித்துள்ளாா்.
மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

சென்னை: முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி வாழத்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை தனது சுட்டுரை பதிவில், ‘தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இதேபோன்று, மேற்கு வங்க முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள மமதா பானா்ஜி, கேரள முதல்வராகப் பதவியேற்கவுள்ள பினராயி விஜயன் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

பாஜக தலைவா் முருகன்: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளாா். அவருக்கு தமிழக பாஜக சாா்பில் மகிழ்வான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் வளா்ச்சிக்கு, தமிழக மக்களின் உயா்வுக்காக தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாஜகவின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும்.

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்:

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியது, தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைத்தது, தமிழக கோயில்களில் தாய்மொழியாகிய தமிழில் அா்ச்சனை செய்ய வழிவகுத்தது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தாா் மறைந்த மு. கருணாநிதி. இந்நிலையில், அவருடைய குமாரா் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கது. அவரை திருவாவடுதுறை ஆதீனத்தின் சாா்பில் வாழ்த்துகிறோம்.

இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான்: சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளா்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஓா் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமாா்ந்த வாழ்த்துகள் என்று சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்  ஏ.ஆா்.ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com