நிம்மதி தரும் செய்தி: கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலை மாறியது

நாட்டில் புதிதாக 4 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 3 நாள்களாக 4 லட்சத்துக்கும் குறைவாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நிம்மதி தரும் செய்தி: கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலை மாறியது
நிம்மதி தரும் செய்தி: கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலை மாறியது


புது தில்லி: நாட்டில் புதிதாக 4 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 3 நாள்களாக 4 லட்சத்துக்கும் குறைவாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 3,499 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஏப்ரல் 30-ஆம் தேதி ஒரே நாளில் 4,01,993 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் மே 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.

முதல் முறையாக.. 4 லட்சத்தைத் தொட்ட புதிய கரோனா பாதிப்பு.. அதுவும் எப்போது தெரியுமா? கரோனா பரவலில் புதிய உச்சம்: ஒரே நாளில் 4 லட்சம் போ் பாதிப்பு

நாள்தோறும் கரோனா பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த நிலையில் கடந்த 3 நாள்களாக அந்த நிலை மாறியுள்ளது.

நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர்: 2,02,82,833
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர்: 1,66,13,292
கரோனாவுக்கு பலியானோர்; 2,22,408
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்:  34,47,133
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 15,89,32,921
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com