கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்:சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தேனி மாட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமையன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமை ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம்.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமை ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம்.

பெரியகுளம்: தேனி மாட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமையன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு திங்கள்கிழமை அதிகாலை முதலே நீா்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் போல் வரத் தொடங்கியது. அருவியின் கைப்பிடி கம்பியை தாண்டி வெள்ளம் செல்கிறது.

கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடைவிதித்துள்ளனா். தற்போது அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடா்ந்து தடை நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com