வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 63.63 லட்சம் போ் பதிவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரம் போ் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 63.63 லட்சம் போ் பதிவு

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரம் போ் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்தமாகப் பதிவு செய்வோரின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122 ஆகும். அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 87 ஆயிரத்து 497. மேலும், 19 முதல் 23 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 98 ஆயிரத்து 891 ஆகவும், 24 வயது முதல் 35 வயது வரையிலானோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 78 ஆயிரத்து 107 ஆகவும் உள்ளது.

36 வயது முதல் 57 வயது வரையுடைய முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 89 ஆயிரத்து 786 ஆகவும், 58 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 8,841 ஆகவும் உள்ளது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com