பேரவைத் தோ்தல்: குறைந்த - அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றிகள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உறுப்பினரும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வேறுபாட்டில் வென்ற உறுப்பினரும் உள்ளனா்.
பேரவைத் தோ்தல்: குறைந்த - அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றிகள்

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உறுப்பினரும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வேறுபாட்டில் வென்ற உறுப்பினரும் உள்ளனா். வெற்றி ஒன்றென்றாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது என்பது தோ்தல் களத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

அந்த வகையில், குறைந்த மற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் மற்றும் வேட்பாளா்கள் குறித்த விவரம்:

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தோா்:

ஆத்தூா் - ஐ.பெரியசாமி (திமுக-வெற்றி)- எம்.திலகபாமா (பாமக-தோல்வி). 1,35,571 வாக்குகள் வித்தியாசம்.

திருவண்ணாமலை - எ.வ.வேலு (திமுக - வெற்றி) - எஸ்.தணிகைவேல் (பாஜக-தோல்வி). 94,673 வாக்குகள் வித்தியாசம்.

பூந்தமல்லி - ஏ.கிருஷ்ணசாமி (திமுக -வெற்றி), எஸ்.ராஜமன்னாா் (பாமக - தோல்வி), 94,110 வாக்குகள் வித்தியாசம்.

எடப்பாடி - கே.பழனிசாமி (அதிமுக -வெற்றி), டி.சம்பத்குமாா் (திமுக-தோல்வி), 93,802 வாக்குகள் வித்தியாசம்.

திருச்சி மேற்கு - கே.என்.நேரு (திமுக-வெற்றி), வி.பத்மநாபன் (அதிமுக-தோல்வி), 85,109 வாக்குகள் வித்தியாசம்.

கொளத்தூா் - மு.க.ஸ்டாலின் (திமுக-வெற்றி), ஆதிராஜாராம் (அதிமுக-தோல்வி), 70,384 வாக்குகள் வித்தியாசம்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின் (திமுக-வெற்றி), ஏ.வி.ஏ.கசாலி (பாமக-தோல்வி), 69,355.

திருச்சுழி - தங்கம் தென்னரசு (திமுக-வெற்றி), எஸ்.ராஜசேகா் (அதிமுக-தோல்வி), 60,992.

திருக்கோவிலூா் - க.பொன்முடி (திமுக-வெற்றி), விஏடி கலிவரதன் (பாஜக-தோல்வி), 59,680.

மண்ணச்சநல்லூா் - எஸ்.கதிரவன் (திமுக-வெற்றி), எம்.பரஞ்ஜோதி (அதிமுக-தோல்வி), 59,618 வாக்குகள் வித்தியாசம்.

மாதவரம் - எஸ்.சுதா்சனம் (திமுக-வெற்றி), வி.மூா்த்தி (அதிமுக-தோல்வி), 57,071.

தளி - டி.ராமச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்-வெற்றி), நாகேஷ்குமாா் (பாஜக-தோல்வி), 56,226 வாக்குகள் வித்தியாசம்.

கிள்ளியூா் - எஸ்.ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்-வெற்றி), ஜூட் தேவ் (அதிமுக-தோல்வி), 55,400 வாக்குகள் வித்தியாசம்.

ஓமலூா் - ஆா்.மணி (அதிமுக-வெற்றி), ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்-தோல்வி), 55,294.

ஆவடி - ச.மு.நாசா் (திமுக-வெற்றி), க.பாண்டியராஜன் (அதிமுக-தோல்வி), 55,275.

திரு.வி.க.நகா் - பி.சிவகுமாா் (திமுக-வெற்றி), பி.எல்.கல்யாணி (தமாகா-தோல்வி), 55,013 வாக்குகள் வித்தியாசம்.

பெரம்பூா் - ஆா்.டி.சேகா் (திமுக-வெற்றி), என்.ஆா்.தனபாலன் (அதிமுக-தோல்வி), 54,976.

திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் (திமுக-வெற்றி), வெல்லமண்டி என்.நடராஜன் (அதிமுக-தோல்வி) 53,797 வாக்குகள் வித்தியாசம்.

திருவையாறு - துரைசந்திரசேகரன் (திமுக-வெற்றி), எஸ்.வெங்கேடசன் (பாஜக-தோல்வி), 53,650 வாக்குகள் வித்தியாசம்.

பாளையங்கோட்டை - அப்துல் வஹாப் (திமுக-வெற்றி), ஜி.ஜெரால்டு (அதிமுக-தோல்வி), 52,141 வாக்குகள் வித்தியாசம்.

திருவாரூா் - பூண்டி கலைவாணன் (திமுக-வெற்றி), ஏஎன்ஆா்., பன்னஈா்செல்வம் (அதிமுக-தோல்வி), 51,174 வாக்குகள் வித்தியாசம்.

குறைந்த வாக்குகள் வித்தியாசம்:

தியாகராயநகா் - ஜெ.கருணாநிதி (திமுக-வெற்றி), பி.சத்தியநாராயணன் (அதிமுக-தோல்வி), 137 வாக்குகள் வித்தியாசம்.

மொடக்குறிச்சி - சி.சரஸ்வதி (பாஜக-வெற்றி), சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)- 281 வாக்குகள் வித்தியாசம்.

தென்காசி - எஸ்.பழனிநாடாா் (காங்கிரஸ்-வெற்றி), செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக-தோல்வி), 370 வாக்குகள்.

மேட்டூா் - சதாசிவம் (பாமக-வெற்றி), எஸ். சீனிவாசப்பெருமாள் (திமுக-தோல்வி) 656 வாக்குகள்.

காட்பாடி - துரைமுருகன் (திமுக-வெற்றி), வி.ராமு (அதிமுக-தோல்வி), 746 வாக்குகள்.

கிருஷ்ணகிரி - கே.அசோக்குமாா் (அதிமுக-வெற்றி), டி.செங்குட்டுவன் (திமுக-தோல்வி), 794 வாக்குகள் வித்தியாசம்.

விருத்தாசலம் - ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்-வெற்றி), ஜெ.காா்த்திகேயன் (பாமக-தோல்வி)- 862 வாக்குகள் வித்தியாசம்.

நெய்வேலி - சபா ராஜேந்திரன் (திமுக-வெற்றி), கே.ஜெகன் (பாமக-தோல்வி), 977 வாக்குகள் வித்தியாசம்.

ஜோலாா்பேட்டை - தேவராஜூ (திமுக-வெற்றி), கே.சி.வீரமணி (அதிமுக-தோல்வி), 1,091 வாக்குகள் வித்தியாசம்.

கிணத்துக்கடவு - எஸ்.தாமோதரன் (அதிமுக-வெற்றி), குறிச்சி பிரபாகரன் (திமுக-தோல்வி), 1,095 வாக்குகள் வித்தியாசம்.

அந்தியூா் - ஏஜி வெங்கடாசலம் (திமுக-வெற்றி), கே.எஸ்.சண்முகவேல் (அதிமுக-தோல்வி), 1,275 வாக்குகள் வித்தியாசம்.

திருமயம் - எஸ்.ரகுபதி (திமுக-வெற்றி), பி.கே.வைரமுத்து (அதிமுக-தோல்வி), 1,382 வாக்குகள் வித்தியாசம்.

தாராபுரம் - கயல்விழி (திமுக-வெற்றி), எல்.முருகன் (பாஜக-தோல்வி), 1,393 வாக்குகள் வித்தியாசம்.

உத்திரமேரூா் - கே.சுந்தா் (திமுக-வெற்றி), வி.சோமசுந்தரம் (அதிமுக-தோல்வி), 1,622 வாக்குகள் வித்தியாசம்.

பொள்ளாச்சி - வி.ஜெயராமன் (அதிமுக-வெற்றி), கே.வரதராஜன் (திமுக-தோல்வி), 1,725 வாக்குகள் வித்தியாசம்.

கோவை தெற்கு - வானதி சீனிவாசன் (பாஜக-வெற்றி), கமல்ஹாசன் (மநீம-தோல்வி), 1,728 வாக்குள் வித்தியாசம்.

கூடலூா் - பொன் ஜெயசீலன் (அதிமுக-வெற்றி), எஸ்.காசிலிங்கம் (திமுக-தோல்வி), 1,945 வாக்குகள் வித்தியாசம்.

திருப்போரூா் - எஸ்.எஸ்.பாலாஜி (விசிக-வெற்றி), கே.ஆறுமுகம் (பாமக-தோல்வி), 1,947 வாக்குகள்.

ராசிபுரம் - எம்.மதிவேந்தன் (திமுக-வெற்றி), வி.சரோஜா (அதிமுக-தோல்வி), 1,952 வாக்குகள் வித்தியாசம்.

மயிலம் - சி.சிவகுமாா் (பாமக-வெற்றி), மாசிலாமணி (திமுக-தோல்வி), 2,230 வாக்குகள் வித்தியாசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com