கரோனா தொற்று அபாயம்:  கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த வலியுறுத்தல்

கரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 
கரோனா தொற்று அபாயம்:  கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த வலியுறுத்தல்



சீர்காழி: கரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர் பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தற்போது  கரோனா நோய்தொற்று தமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஒரு கணக்கீட்டாளருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர் அன்றைய தினம் கணக்கீடு மேற்கொள்ளும் அனைத்து இல்லங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் கரானா நோய்த்தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து பணியாளருக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

ஒரு கணக்கீட்டாளர் ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் வீடுகளுக்கு மேல் சென்று கணக்கு மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நோய்த்தொற்று அதிகம் பரவ காரணமாகிவிடும். 

எனவே கடந்த 26.4.2021 அன்று எங்களது சம்மேளனம் மின்வாரிய நிர்வாகத்திற்கு மே மாதத்திற்கு சென்ற மாத கணக்கீட்டிணையே  மின் கட்டணமாக வசூல் செய்ய கடிதம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றளவும் மின்வாரியம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசாங்கம் உடன் இவ்விஷயத்தில் தலையிட்டு சென்ற மாத கணக்கீட்டு தொகையையே மே 2021 மாதத்திற்கு கணக்கீடு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com