ஸ்டெர்லைட் ஆலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர். 
ஸ்டெர்லைட் ஆலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு
ஸ்டெர்லைட் ஆலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத்தொடர்ந்து 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங், சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன் தொழிற்சாலை குறித்து தொழில் நுட்ப அறிவு சார்ந்த அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை பரிந்துரை பட்டியலில் இருந்து பத்தாவது பிரதிவாதி தேர்ந்தெடுக்கும் இரண்டு சுற்றுச்சூழல் வல்லுனர்கள் என 9 பேர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் தலையில் குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ‌

இந்த ஆய்வு முடிந்த பிறகு தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கபடும் என்றும் அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com