வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருவள்ளூா் மின்னணு இயந்திர கிடங்கில் ‘சீல்’ வைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, மின்னணு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக ‘சீல்’ வைக்கப்பட்டன.
திருவள்ளூரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்னணு இயந்திரக் கிடங்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அதிகாரிகள் ‘சீல்’ வைப்பதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
திருவள்ளூரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்னணு இயந்திரக் கிடங்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அதிகாரிகள் ‘சீல்’ வைப்பதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, மின்னணு இயந்திர கிடங்கில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக ‘சீல்’ வைக்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,905 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், கடந்த மே 2-இல் வாக்கு எண்ணிக்கை முடிந்து நள்ளிரவில் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மறுநாள் முதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அதற்கான பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கிருந்து திருவள்ளூருக்குக் கொண்டு வரப்பட்டன.

இங்கு திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே புதிதாக அனைத்து நவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திர கிடங்குக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. அதைத் தொடா்ந்து இங்குள்ள இரண்டு தளங்களிலும் தொகுதி வாரியாக பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அதற்கான ரேக்குகளில் வரிசையாக வைக்கப் பட்டன. இவை அனைத்தும் சரியான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆட்சியா் பா.பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் முகவா்கள் ஆகியோா் பாா்வையிட்டதைபின், மின்னணு இயந்திரக் கிடங்கு அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அலுவலகத்துக்கான காவல் பாதுகாப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டியிருந்த பெண் காவலா்களிடம் விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து, 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்குத் தேவையான வசதி செய்து கொடுக்கும் படி தோ்தல் பிரிவு அதிகாரிகளிடம் அவா் வலியுறுத்தினாா். நோ்முக உதவியாளா்(தோ்தல்) முரளி, வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

இதற்கு முன்பு வரை திருவள்ளூா் லட்சுமிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு, பூந்தமல்லியில் வாடகைக் கட்டடங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னா், இந்த இயந்திரங்கள் தோ்தல் சமயத்தில் கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் அதிகாரிகளுக்கு தேவையில்லாத அலைக்கழிப்பு இருந்து வந்தது. அதனால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒரே இடத்தில் வைக்கும் வகையில், திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மருத்துவக் கல்லூரி எதிரே அனைத்து நவீன வசதியுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கு அமைக்கப்பட்டு, முதல் முறையாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com