பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

பின்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுனருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. 

பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 

இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார். கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தினார். அண்ணாவின் நினைவிடத்துக்கும்  சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதையடுத்து நிகழ்வாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்றார். அங்கு திராவிடக் கழகத் தலைவர் வீரமணி, முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார். 

பின்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பெரியாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com