தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம்: ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். 
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம்: ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்ல தொடக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக கரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் மக்களின் துன்பங்களை போக்குவதற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2,000/- நிவாரணம்; ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு; சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர், 
பணிக்குச் செல்லும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் இலவச பயணம்; ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை; கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். 
இது ஒரு நல்ல தொடக்கமாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்பதுடன், தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. அதிமுக - பாஜக ஆட்சிகளின் தவறான நடவடிக்கைகளின் விளைவாக கரோனா நோய்த் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியில் தமிழகம் தத்தளிக்கிறது. கரோனா நோய்த் தொற்று தீவிரமாகி மரணங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் கரோனா தொற்றை எதிர்த்த போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com