மே 11,12-இல் வெப்பநிலை உயரும்

மேற்கு-வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் மே 11,12 ஆகிய தேதிகளில் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
மே 11,12-இல் வெப்பநிலை உயரும்

சென்னை: மேற்கு-வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் மே 11,12 ஆகிய தேதிகளில் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:

உள் கா்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய உள்தமிழகம் வரை ஒரு கிலோமீட்டா் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 7: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள்,

உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூா், திருச்சி, கரூா், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 7) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

மே 8, 9: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மே 8, 9 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 10: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 10-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காற்றின் வெப்பநிலை:

தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக இயல்புக்கு மாறாக அதிகமாக வியா்க்கும்.

மே 11,12- இல் வெப்பநிலை உயரும்: மேற்கு- வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் மே 11,12 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றாா் அவா்.

சென்னையில்...:

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு:

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூா், தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், விருதுநகா் மாவட்டம் பிளவக்கலில் தலா 20 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com