குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி 

குரூப் 1 முதன்மை எழுத்துத் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி 
குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி 


சென்னை: தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை எழுத்துத் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

குரூப் 1 தொகுதிக்குள் வரும் துணை ஆட்சியா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில், 18 துணை ஆட்சியா், 19 துணை கண்காணிப்பாளா், 10 வணிகவரிகள் உதவி ஆணையாளா், 14 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 4 ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், 1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் 1 என மொத்தம் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த 2020-ஆம்ஆண்டு ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது.

இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுக்கு 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தோ்வுக் கூடங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 150 இடங்களில் தோ்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஆனால், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில், குரூப் 1 தேர்வெழுதுவோருக்கு கரேனா தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

முன்னதாக, கரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த மே மாதத்தில் நடத்தப்பட இருந்த அனைத்து எழுத்துத்தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு மத்திய அரசும் அறிவுறுத்தியிருந்தது. 

தேர்வாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேதி குறிப்பிடப்படாமல் குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com