தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு: மெட்ரோ ரயில் சேவை மே 10 முதல் 24 வரை நிறுத்தம்

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், முழுபொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மெட்ரோ ரயில் சேவை மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு: மெட்ரோ ரயில் சேவை மே 10 முதல் 24 வரை நிறுத்தம்

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், முழுபொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மெட்ரோ ரயில் சேவை மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருவதையடுத்து, தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம்தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை மே 10-ஆம்தேதி முதல் 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா பரவலை தடுப்பதற்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப்போக்குவரத்துக்து தற்காலிகமாக தடை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, மெட்ரோ ரயில்சேவை வரும் திங்கள்கிழமை (மே 10) அதிகாலை 4 மணி முதல் மே 24-ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மெட்ரோ ரயில் சேவை :

பொதுமுடக்கத்துக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை ( மே 9)அன்று மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வசதியாக ஞாயிற்றுக்கிழமை (மே 9) மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com