தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கியது

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கியது
தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கியது


மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா நோய்த் தொற்று தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் 33 அமைச்சா்களும் பங்கேற்றுள்ளனா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கழுத்தை நெறுக்கும் சவாலாக உள்ள கரோனா தொற்றின் இரண்டாம் அலையை எவ்வாறு எதிர்கொள்வது, நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை எவ்வாறு செய்வது, கரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ.2,000 வழங்குவதற்கான நிதி ஒப்புதல், நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற திட்டத்துக்கான நிதி ஒப்புதல், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாக உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் இந்த அமைச்சரவைக் கூட்டம் கரோனா நோய்த் தொற்றை மையப்படுத்தியே இருக்கும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com