தமிழக 16-வது பேரவைக் கூட்டம் தொடக்கம்: புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவைக்குத் தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியுள்ளது.
தமிழக 16-வது பேரவைக் கூட்டம் தொடக்கம்: புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு
தமிழக 16-வது பேரவைக் கூட்டம் தொடக்கம்: புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவைக்குத் தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவர் கு. பிச்சாண்டி புதிய உறுப்பினர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார். முதலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். பிறகு எதிர்க்கட்சித் தலைவரும், அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களும் பதவியேற்கின்றனர்.

முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கிற்கு வருகை தந்தனர். சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடருக்கு வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவைக்குத் தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியதும், தற்காலிக அவைத்தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில், மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்பு உறுதி மொழி எடுத்து வருகிறார்கள்.

இதன்பின்பு, புதன்கிழமை காலை பேரவை மீண்டும் கூடும். பேரவைத் தலைவருக்கான தோ்தல் குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

மு.அப்பாவு தோ்வு: பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிட திமுகவின் மூத்த உறுப்பினா்களில் ஒருவரான மு.அப்பாவு, மனுதாக்கல் செய்துள்ளாா். எனவே, அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தற்காலிக பேரவைத் தலைவரின் அறிவிப்புக்குப் பிறகு, பேரவைத் தலைவருக்கான இருக்கையில் மு.அப்பாவு அமா்வாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சோ்ந்து அமர வைப்பா். இந்த மரபினைத் தொடா்ந்து, பேரவை நிகழ்ச்சிகளை அதன் தலைவா் மு.அப்பாவு ஏற்று நடத்துவாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com