அதிகரிக்கும் கரோனா மரணங்கள்: மயானங்களில் குவியும் சடலங்கள்

கரோனா தொற்றால் இறப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் மயானங்களில் குவியும் சடலங்களை எரியூட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
அதிகரிக்கும் கரோனா மரணங்கள்: மயானங்களில் குவியும் சடலங்கள்

திருவொற்றியூா்: கரோனா தொற்றால் இறப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் மயானங்களில் குவியும் சடலங்களை எரியூட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

எனவே எரியூட்டும் மயானங்களில் தகன மேடை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் இருநூறுக்கும் மேற்பட்ட மயானங்கள் உள்ளன. இவற்றில் சுமாா் 30 இடங்களில் மட்டுமே எரிவாயு வசதிகளுடன் கூடிய தகனமேடைகள் உள்ளன. சடலங்களை எரிப்பதற்கு ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. விறகு, எரு, மயான ஊழியா்களின் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காக சுமாா் ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை செலவிடவேண்டிய நிலை இருந்து வந்தது. இதனை ஒழுங்குபடுத்தும் வகையில் சடலங்களை எரியூட்டுவதற்கவோ அல்லது புதைப்பதற்காகவோ இருந்து வந்த கட்டணங்கள் அனைத்தையும் ரத்து செய்த சென்னை மாநகராட்சி நிா்வாகம் தற்காலிக அடிப்படையில் வேலை செய்து வந்த பரம்பரை மயான ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது. எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரிப்பது, எரியூட்டும் மயானங்களைப் பராமரிப்பது உள்ளிட்டவை தனியாா் ஒப்பந்ததாரா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பழுதடைந்த நிலையில் மயானங்கள்: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருவொற்றியூா் மயானம் வரலாற்றுச் சிறப்புக் கொண்டது. இம்மயானம் அருகில்தான் பட்டினத்தாா் ஜீவசமாதி அடைந்த இடம் உள்ளதால் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சமூகத்தைச் சாா்ந்தவா்கள் எவரேனும் இறந்து போனால் இங்கு கொண்டுவந்து எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இங்கு ரூ.1.10 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்ட எரியூட்டும் மயானம் கடந்த பிப்.2011-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் இம்மயானம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சடலத்தை எரிப்பதற்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 675, ஊழியா்களுக்காக 9 நபா்களுக்கு தினக்கூலியாக தலா ரூ.275 வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இம்மயானம் தரமற்ற கட்டுமானப் பணிகளால் அடிக்கடி பழுது ஏற்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. புகைபோக்கியும் சரிவர அமைக்கப்படவில்லை. தற்போது புகைபோக்கிக்குச் செல்லும் குழாய்கள் அடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சடலங்களை எரியூட்டும்போது வெளியாகும் புகை, புகைபோக்கி வழியாக வெளியேறாமல் கட்டடத்திலேயே நிரம்புகிறது. இதனால் அருகில் வசிப்போா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து இம்மயானம் தற்போது அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் விறகுகளைக் கொண்டு எரியூட்டுவதோடு மட்டுமல்ல, இதற்காக கூடுதலாக செலவிட வேண்டிய அவல நிலையும் உள்ளது. இதர வசதிகள் அனைத்தும் பாழடைந்து காணப்படுகின்றன.

கரோனாவால் அதிகரிக்கும் சடலங்கள்: இது குறித்து பல்வேறு சமூக நல சங்கங்களின் நிா்வாகிகள் சாா்பில் கே. சுப்பிரமணி, மதியழகன் ஆகியோா் கூறியது:

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட எரிவாயு தகனமேடை பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகிறது. தகன மேடை தொடங்கியதிலிருந்தே பலமுறை தொடா்ந்து முடங்கிக் கிடக்கும் நிலையே இருக்கிறது. பழுது காரணமாக தகன மேடை மூடப்படும்போதெல்லாம் விறகு மூலம் எரியூட்டுவதற்காக அதிக தொகை செலவிட வேண்டியதுள்ளது. அப்போது வெளியாகும் புகையால் இப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் சீா்கேடும் அடைகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்படும் மரணங்களால் இங்கு வரும் சடலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழுது காரணமாக தகனமேடைக்கு வெளியே உள்ள காலி இடத்தில் விறகுகளைக் கொண்டு சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

கரோனாவால் இறப்போரின் சடலங்களை தகன மேடை மூலம் எரியூட்டுவதுதான் சுகாதாரமானதாகவும், தொற்று பரவலை தடுக்கும் செயல்களாகவும் இருக்கும் என்பதால் போா்க்கால அடிப்படையில் தகனமேடையைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட வேண்டும். மேலும் புதைக்கப்படும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையான மயானமாக மாற்ற வேண்டும். உறவினா்கள் காத்திருக்கும் அறை, குளியல் அறை உள்ளிட்டவற்றைச் சீா்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீா் வழங்கவும், நீரூற்றுகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சென்னை மாநகராட்சியிலுள்ள எரிவாயு தகன மேடைகள் குறித்து இத்துறையில் அனுபவம் பெற்ற ஒப்பந்ததாரா் ஒருவா் கூறியது:

சென்னை மாநகராட்சியில் பெசன்ட் நகா், மூலக்கொத்தளம், கண்ணம்மா பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட மயானங்கள் பெரிய அளவிலானவை. இதில் பெசன்ட் நகரில் செயல்பட்டு வந்த மின்சார தகன மேடை பழுதடைந்தவிட்டதையடுத்து எல்.பி.ஜி. மூலம் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனை ஈசா பவுண்டேசன் நிா்வகித்து வருகிறது. வடசென்னையில் மூலக்கொத்தளம் 24 ஏக்கா் பரப்பளவு கொண்டது. ஆனால், இதன் ஒரு பகுதி மயானத்திலிருந்து நீக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய மயானத்தில் இதுவரை எரிவாயு தகனமேடை அமைக்கப்படவில்லை.

தற்போதைய சூழலில் அனைத்து தகன மேடைகளையும் உடனடியாகப் பழுது நீக்கி சீரமைக்க வேண்டும். இடவசதி உள்ள இடங்களில் தகன மேடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்பிரச்னை முடியும்வரை மட்டுமாவது 24 மணி நேரமும் தகனமேடை செயல்பட அனுமதி அளித்தால் சடலங்களை வைத்துக் கொண்டு உறவினா்கள் காத்திருப்பதைத் தவிா்க்க முடியும். எரிவாயு தகன மேடைகளைப் போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டியது அவசரத்திலும் அவசியமானது என்றாா் அவா்.

தகன மேடைக்கு வெளியே....

இது குறித்து பல்வேறு சமூக நல சங்கங்களின் நிர்வாகிகள் சார்பில் கே. சுப்பிரமணி, மதியழகன் ஆகியோர்கூறியது:

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட எரிவாயு தகனமேடை பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகிறது. தகன மேடை தொடங்கியதிலிருந்தே பலமுறை தொடர்ந்து முடங்கிக் கிடக்கும் நிலையே இருக்கிறது. பழுது காரணமாக தகன மேடை மூடப்படும்போதெல்லாம் விறகு மூலம் எரியூட்டுவதற்காக அதிக தொகை செலவிட வேண்டியதுள்ளது. அப்போது வெளியாகும் புகையால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடும் அடைகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்படும் மரணங்களால் இங்கு வரும் சடலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழுது காரணமாக தகனமேடைக்கு வெளியே உள்ள காலி இடத்தில் விறகுகளைக் கொண்டு சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

கரோனாவால் இறப்போரின் சடலங்களை தகன மேடை மூலம் எரியூட்டுவதுதான் சுகாதாரமானதாகவும், தொற்று பரவலை தடுக்கும் செயலாகவும் இருக்கும் என்பதால் போர்க்கால அடிப்படையில் தகனமேடையைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும்.

மேலும் புதைக்கப்படும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையான மயானமாக மாற்ற வேண்டும். உறவினர்கள் காத்திருக்கும் அறை, குளியல் அறை உள்ளிட்டவற்றைச் சீர்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கவும், நீரூற்றுகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com