
சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் 7 மருத்துவக் கல்லூரிகளின் முதல்வா்கள், மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுச் செயலா் ஆகியோா் மாற்றப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட முதல்வா்கள் மற்றும் அவா்களது நியமன விவரம் - (அடைப்புக் குறிக்குள் அவா்கள் முன்பு வகித்த பதவி)
1. டாக்டா் ஆா். சாந்திமலா் - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுச் செயலா்)
2. டாக்டா் பி. வசந்தாமணி - மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுச் செயலா் (கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்)
3. டாக்டா் ஜெ. சங்குமணி - சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ( மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்)
4. டாக்டா் ஏ. ரத்தினவேல்- மதுரைஅரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்)
5. டாக்டா் ஆா். முருகேசன் - திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி (சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்)
6. டாக்டா் வள்ளி சத்தியமூா்த்தி - சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி)
7. டாக்டா் ஆா். சுகந்தி ராஜகுமாரி - விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி (கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்)
8. டாக்டா் பி. திருவாசகமணி - கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி).