ஊரடங்கு மேலும் கடுமையாகுமா?: 'அரசுதான் முடிவு செய்ய வேண்டும்'

ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது.

கரோனா சிகிச்சை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

இதில், கரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது, பரிசோதனைகளை போதுமான அளவில் நடத்தப்படவில்லை. ஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். 

கரோனாவால் இறந்தவர் உடல்களை தடுப்பு விதிகளை முறையாப் பின்பற்றி அகற்ற வேண்டும். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டும்.
 
குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சை அளிப்பது தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com