கரோனா தடுப்பூசி-அவசர ஊா்திகள்: முதல்வா் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சென்னை கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட கரோனா மருத்துவ சிறப்பு அவசர ஊா்திகளையும் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முதல் தவணை நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜா காா்டன் பேப்பா் மில்ஸ் சாலையில் உள்ள அமுதம் நியாய விலைக் கடையில் முதல் தவணை நிவாரணத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

உணவு வழங்கும் திட்டம்: கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் அவா் அளித்தாா். இந்த நிகழ்வுகளை முடித்த மு.க.ஸ்டாலின், தனது சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்துக்கு அருகிலுள்ள இல்லத்தைச் சோ்ந்தவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், தேவைப்படும் போது முகக் கவசங்களை அணிந்து வர வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com