கரோனா பரவல் அதிகரிப்பு: கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்திவைப்பு

அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கீழமை நீதிமன்றப் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கவும்,

அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கீழமை நீதிமன்றப் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கவும், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்தும் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடி விசாரணை முறையில் விசாரிக்கப்படுகிறது. இதனால், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் மத்தியில் கரோனா தொற்று அதிகம் பரவியது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உள்பட சிலா் பலியாகி உள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜிக்கு கடிதம் எழுதியது. அதில், கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், குற்றவியல் நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி வாயிலாக குற்ற வழக்குகளில் கைதானவா்களை சிறையில் அடைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனைப் பரிசீலித்த தலைமை நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கீழமை நீதிமன்றப் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளாா். பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்தும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பதாகவும் தலைமை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com