
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 7 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது.
அதிகபட்சமாக, திருப்பத்தூரில் 106 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. மதுரையில் 104 டிகிரி, கரூா் பரமத்தியில் 103 டிகிரி, திருச்சிராப்பள்ளி, வேலூரில் தலா 102 டிகிரி, நாமக்கல்லில் 101 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை உயரும்:
தமிழகத்தில் வரும் 3 நாள்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: மேற்கு திசையில் இருந்து தமிழகத்துக்கு காற்று வீசியதால், வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. தற்போது, தென் திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.