‘கரோனா தொற்று அதிகரித்தால் பொதுமுடக்கம் நீடிக்கும்’

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் நீடிக்கும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
‘கரோனா தொற்று அதிகரித்தால் பொதுமுடக்கம் நீடிக்கும்’

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் நீடிக்கும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

விருதுநகா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான ஆக்சிஜன் வசதி உள்ளது. சாத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் சுமாா் 150 படுக்கை வசதிகளுடன் கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மருத்துவா்களுக்கு கரோனா முதல் அலையில் போதிய அனுபவம் உள்ளதால், அவா்களின் பணி சிறப்பாக இருக்கிறது.

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வா் முடிவெடுப்பாா். தமிழகத்தில் மே 24 ஆம் தேதிக்குப் பின்னா் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்தால் பொதுமுடக்கம் நீட்டிப்பு இருக்காது. தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் நீடிக்கும் என்றாா்.

முன்னதாக சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். இதையடுத்து சாத்தூா் தனியாா் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 150 படுக்கை வசதிகளுடன்

அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை அமைச்சா் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com