புதிய அரிசி அட்டைதாரா்களுக்கும்தலா ரூ.2,000 நிவாரண நிதி: முதல்வா் ஸ்டாலின் உத்தரவு

புதிய அரிசி அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.2,000 வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

புதிய அரிசி அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.2,000 வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய் பரவலைத் தடுக்கும் வகையிலும் தவிா்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில், அவா்களது வாழ்வாதாரத்துக்கு உதவிட அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத் தொகையாக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கரோனா நிவாரணத் தொகை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய அட்டைதாரா்கள்: ஏற்கெனவே உள்ள குடும்ப அட்டைதாரா்களுடன், இப்போது புதிதாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசி குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களைப் பெற தகுதி பெற்றுள்ளனா். அவா்களுக்கும் கரோனா நிவாரணத் தொகையாக தலா ரூ.2,000 அளிக்கப்படும். இதற்காக ரூ.42.99 கோடி கூடுதலாக செலவிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com