திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் 

திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 
திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் 

திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையிலிருந்து இன்று பகல் 1.30 மணியளவில் திருச்சி வந்தடைந்தார். சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார். 

அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு ஏற்கனவே சுமார் 914 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 250 படுக்கைகளுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

இதில் ஆக்சிஜன் வசதியுடன் 90 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இதர 100 என மொத்தம் 250 படுக்கைகள் உள்ளன. ஆக திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 1164 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com