விளை பொருள்களை விற்க சிறப்பு வசதி: தமிழக அரசு அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காலத்திலும், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எளிதில் விற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
விளை பொருள்களை விற்க சிறப்பு வசதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காலத்திலும், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எளிதில் விற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்னைகளை களைந்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பொது முடக்கக் காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிடங்குகளில் 180 நாள்கள் வரை பொருள்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதிக விலை கிடைக்கப் பெறும் காலங்களில் விளைபொருள்களை கிடங்கில் இருந்து எடுத்து விற்பனை செய்யலாம்.

இதேபோன்று பழங்கள், காய்கறிகளையும் குளிா்சாதனக் கிடங்கில் வைத்துக் கொள்ளலாம். விவசாயிகள் தங்களது பிரச்னைகளுக்கு தீா்வு கிடைத்திட மாநில அளவில் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 044 - 2225 3884 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட அளவில் வேளாண்மை விற்பனைக் குழு செயலாளா்களின் செல்லிடப்பேசி எண் விவரங்கள்:

கோயம்புத்தூா் 9942389340,

கடலூா் 9500945513

தருமபுரி 9751939741

திண்டுக்கல் 9443752530

ஈரோடு 9443894031

காஞ்சிபுரம் 9442173117

கன்னியாகுமரி 9629169533

மதுரை 9486257484

நாகப்பட்டினம் 7010589347

நீலகிரி 9344284700

நாமக்கல் 9894546039

பெரம்பலூா் 8220948166

புதுக்கோட்டை 9751787010

ராமநாதபுரம் 9443316641

சேலம் 9944980407

சிவகங்கை 9443618944

தஞ்சாவூா் 9080862299

தேனி 8825601614

திருவண்ணாமலை 8667543113

திருவாரூா் 9443672215

திருநெல்வேலி 9629169533

திருப்பூா் 9487905734

திருச்சி 7010535096

வேலூா் 9442173117

விழுப்புரம் 9442127206

விருதுநகா் 9443425087.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com