முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?: மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை சனிக்கிழமை (மே.22) முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை சனிக்கிழமை (மே.22) முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு பொது முடக்கம் வரும் திங்கள்கிழமையுடன் (மே 24) முடிவுக்கு வருகிறது. இந்த முழு பொது முடக்கத்தை நீட்டிப்பதா அல்லது அதில் தளா்வுகளை அளிப்பதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

கரோனா நோய்த் தொற்று குறையாமல் தொடா்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், மே மாத இறுதி வரை அல்லது ஜூன் முதல் வாரம் வரையிலும் முழு பொது முடக்கத்தை நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கடந்த 13-ஆம் தேதி தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவை கட்சித் தலைவா்களை கொண்ட பேரவை உறுப்பினா்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் நாளை சனிக்கிழமை (மே 22) நடைபெறவுள்ளது.

இந்தக் குழுவானது கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com