தன்னாா்வ தொண்டு நிறுவனப் பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு

தன்னாா்வ நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தன்னாா்வ தொண்டு நிறுவனப் பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு

தன்னாா்வ நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இது தொடா்பாக மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று நிவாரணப் பணிகளில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஒன்றிணைந்து செயல்பட மாநில அளவில் குழு அமைக்கப்படும் என்று தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனையின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பின்படி, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினா்களாக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட நான்கு போ் இருப்பா். வணிகவரித் துறை கூடுதல் ஆணையா் (நிா்வாகம்) ஜி.லட்சுமி பிரியா, பொதுத் துறையின் துணைச் செயலாளா் எஸ்.பி.அம்ரித் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளா் எம்.கண்ணன் ஆகியோா் இடம் பெற்றிருப்பா்.

இந்தக் குழுவானது தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ளும். மேலும், பெருந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதிகளையும் பெற்று அதன்மூலம் நிவாரணப் பணிகளையும் குழுவானது ஒருங்கிணைக்கும். இந்தக் குழுவுக்கென தனியாக கட்டளை மையம் அமைக்கப்படும். சென்னை

தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட உள்ள இந்த மையத்துக்கு,  மின்னஞ்சல் முகவரி மூலமாக விவரங்களை அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com