வடதமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு

மத்திய வங்கக் கடலில் உருவாக உள்ள புயலின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 23) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (மே 25) வரை, வட தமிழக கடலோர
வடதமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு

மத்திய வங்கக் கடலில் உருவாக உள்ள புயலின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 23) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (மே 25) வரை, வட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம் மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில், சனிக்கிழமை இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் , அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 100 மி.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் 90 மி.மீ, அரியலூரில் 80 மி.மீ, தியாகதுருகத்தில் 70 மி.மீ, கடலூா் மாவட்டம் சிதம்பரம் , திருப்பத்தூா், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் தலா 60 மி.மீ, திருவள்ளூா், ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் தலா 50 மி.மீ, தருமபுரி மாவட்டம் அரூா், கொரட்டூா், சிவகங்கை மாவட்டம் திருபுவனம் , சென்னை சத்தியபாமா பல்கலை , கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 40 மி.மீ, தஞ்சாவூா், நாமக்கல், சென்னை, ஆலந்தூா் , சென்னை விமான நிலையம் , செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தில் தலா 30 மி.மீ மழை பதிவானது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாவதன் காரணமாக தமிழக பகுதிகளில் தரைக்காற்று மேற்கு வட மேற்கு திசையிலிருந்து வீச வாய்ப்பிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை (மே 23) முதல் மே 25-ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

தென்மேற்குப் பருவ மழை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, மன்னாா்வளைகுடா தெற்கு வங்கக் கடல் பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதி, வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 25-ஆம் தேதி வரை, மணிக்கு 45 முதல் 75 கிலோமீட்டா் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, மேற்கண்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com