இன்று நள்ளிரவு 11.45 மணி வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

இன்று நள்ளிரவு 11.45 மணி வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று  போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு 11.45 மணி வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

இன்று நள்ளிரவு 11.45 மணி வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று  போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட, மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி, முதல்வர் கடந்த 10.05.2021 முதல் 24.05.2021 வரையிலான இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, வரும் 24.05.2021 காலை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை நீட்டித்து நேற்றைய தினம் (22.05.2021) உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, நேற்றும் (22.05.2021), இன்றும் (23.05.2021) அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கிட அனுமதித்துள்ளார்.
அதன் அடிப்படையில், பொது மக்கள் சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து பயணித்திட ஏதுவாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்றும் (22.05.2021), இன்றும் (23.05.2021) தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 1,500 பேருந்துகளும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, தற்போது இயக்கப்பட்டு வருகிறது. நேற்று (22.05.2021) முதல் இன்று (23.05.2021) மாலை 6.00 மணி வரையில், சென்னையிலிருந்து 1,331 பேருந்துகள் இயக்கப்பட்டு, 65,746 பயணிகளும், மற்ற பிற ஊர்களிலிருந்து 3,662 பேருந்துகள் பல நடைகள் இயக்கப்பட்டு, 5,94,638 பயணிகள் என ஆகமொத்தம் 4,993 பேருந்துகள் வாயிலாக 6,60,384 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (22.05.2021) போக்குவரத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், மதுரையிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படுகின்ற பேருந்துகள் இயக்கத்தினை பார்வையிட்டு, மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதோடு, 24 மணி நேரமும் இப்பணியினை உடன் இருந்து கண்காணித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கத்தினை ஆய்வு செய்தார். இன்று (23.05.2021) இரவு 7.00 மணியளவில், போக்குவரத்துத்துறை அமைச்சர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதை ஆய்வு செய்தார்கள். மேலும், நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கிருமிநாசினிகளை பயன்படுத்துதல், கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்திட போதிய முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் கேட்டறிந்தார். இன்று நள்ளிரவு 11.45 மணி வரையில் இயக்கப்படுகின்ற பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு சென்றிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.முத்துகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் ஜோசப் டையஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com