தொழிற்சாலை வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம்: தமிழக அரசு

தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொழிற்சாலை வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம்: தமிழக அரசு

தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, 24 அன்று முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலை தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த தொழிற்சாலை பணியாளர்கள் பணிக்கு சென்றுவர ஏற்கெனவே இ பதிவு முறையில் https://eregister.tnega.org/ பதிவு செய்துள்ளார்கள். ஏற்கெனவே பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள் பணிக்கு சென்றுவர 25 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆதலால், இத்தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  இந்த நான்கு சக்கர வாகனங்களை இ பதிவு முறையில் https://eregister.tnega.org/ வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இ பதிவு செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல்துறையினர் இவ்வாகனங்களை அனுமதிப்பர்.
இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளை தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான இ பதிவு தானாகவே புதுப்பிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com